வங்கிகளுக்கு போறீங்களா…? இதை மாத்திட்டாங்க..! உங்களுக்கு தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் வங்கிகள் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் 14ம் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் இருககும்.
இந் நிலையில் வங்கிகளின் வேலைநேரம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழக வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
வங்கிகள் அனைத்தும் பகல் 2 மணி வரை இயங்கும். ஆனால் மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மாலை 5 மணி வரை இயங்கும். வங்கி கிளைகளில் 3ல் ஒரு பங்கு ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும்.
NEFT, RGTS,IMBS ஆகிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். காசோலை பரிவர்த்தனை, ஏடிஎம் ரொக்கம் செலுத்தும் சேவைகள் கட்டாயம் உண்டு என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.