Sunday, May 04 11:53 am

Breaking News

Trending News :

no image

விஜயகாந்த் ரொம்ப சீரியஸ்…! கண்ணீர் விடும் தொண்டர்கள்…!


சென்னை: நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இல்லை என்று மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் அண்மைக்காலமாக உடல்நலம் குன்றி காணப்படுகிறார். சில ஆண்டுகளாகவே அவர் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் விஜயகாந்த் செயற்கை சுவாசத்துடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை மியாட் நிர்வாகம் மறுத்துள்ள நிலையில் விஜயகாந்தின் லேட்டஸ்ட் உடல்நிலை விவரம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

உடல்நிலை சீரான நிலையில் இல்லை என்பதை முதன்முறையாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதால் கட்சி தொண்டர்கள், அவரது ஆதரவாளர்கள், திரையுலக நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அதிர்ச்சியும், கவலையும் கொண்டுள்ளனர்.

Most Popular