இன்னிக்கு 3 இல்ல… 2 தான்…! த.மா.கா சஸ்பென்ஸ்
தமது கட்சி வேட்பாளர்களில் 3 பேரில் 2 பேர் பெயரை அறிவித்து இருக்கிறார் தமாகா தலைவர் வாசன்.
லோக்சபா 2024 தேர்தலில் தமாகா, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சிக்கு மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்த வாசன், இன்று யார் போட்டியிட போகிறார்கள் என்று அறிவித்து இருக்கிறார்.
அதன்படி ஈரேட்டுக்கு விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் முடிவாகவில்லை.
அந்த பகுதியின் முக்கிய தலைவர்கள் பல வட மாநிலங்களில் உள்ளதால் நாளை கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று வாசன் கூறி இருக்கிறார்.
இந்த தூத்துக்குடி தொகுதி நேற்றைய தினம் பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக பாஜக அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், அந்த தொகுதியை தமாகாவுக்கு அளித்திருப்பதை உணர்ந்து, நெல்லை தொகுதியை நயினார் நாகேந்திரனுக்கு வழங்கி விளக்கம் தந்தது.