ரஜினியை மிரட்டியவர்…? 30 ஆண்டுகள் கழித்து வெளியான ரகசியம்…!
சென்னை: ஆரம்ப காலங்களில் நடிகர் ரஜினிகாந்தை மிரட்டிய சினிமா தயாரிப்பாளர் என்ற விவரம் இப்போது லீக்காகி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் மாஸ்.. அது ஒருவர் தான்.. ஒருவரே தான்.. அவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தோற்றத்தில் எளிமை, ஸ்டைலில் விறுவிறுப்பு என அவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகும் காலத்துக்கு முன்பாக, தொடக்க கால கட்டத்தில் சிறிய வேடங்கள், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் படிப்படியாக தமது உழைப்பு, விடா முயற்சி என முன்னுக்கு வந்தார்.
தாம் கதாநாயகனாக ஆகும் முன்பாக தமக்கு நேர்ந்த மற்றும் மறக்கமுடியாத சில நிகழ்வுகளை தர்பார் பட ஆடியோ விழாவில் அவர் பேசி இருந்தார். அப்போது தம்மை ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் சம்பளம் கேட்டதற்கு மிரட்டியதாகவும், சினிமா உலகத்தில் இருந்து காலி செய்துவிடுவேன் என்று பேசியதாகவும் தெரிவித்து இருந்தார்.
யார் அந்த தயாரிப்பாளர் என்பதை அவர் வெளியில் சொல்லாமல் நாசூக்காக மறுத்துவிட்டார். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்ற விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் கசியவிட்டுள்ளார்.
ரஜினியை மிரட்டிய, அவமானப்படுத்திய அந்த தயாரிப்பாளர் பெயர் சிவசுப்ரமணியம் என்று உண்மையை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் 30 ஆண்டுகளாக தெரியாமல் இருந்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கிறது.