ஒரு போட்டோ தான்…! 3 கோடி ரூபாய் அள்ளிய பிரபல நடிகை
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பதிவிடும் போட்டோவுக்கு இன்ஸ்டாகிராம் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ள தகவல் கிறுகிறுக்க வைத்துள்ளது.
திரையுலகம் வினோதமானது…. அதில் திரை நட்சத்திரங்கள் ஸ்டைலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் வட்டம் இருக்கும். நடிகர்கள், நடிகைகள் வெளியிடும் போட்டோக்கள், கருத்துகளுக்கு தனி இடம் உண்டு.
சமூக வலைதளங்களில் அவர்கள் ரிலீஸ் செய்யும் போட்டோக்களுக்கு இன்ஸ்டாகிராம் ஆப் சம்பளம் தருகிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். அப்படி ஒரு போட்டோ போட்டு அதிக பணம் சம்பாதிக்கும் இடத்தில் இருப்பவர் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ. தமது ஒரு பதிவுக்கு இவரது இன்ஸ்டாகிராம் தரும் சம்பளம் கிட்டத்தட்ட 12 கோடி.
இந்தியாவை பொறுத்தவரைக்கு விராட் கோலிக்கு 5 கோடி ரூபாயை இன்ஸ்டாகிராம் தருகிறது. திரைத்துரையை பொறுத்த வரை பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கிறது. 27வது இடத்தில் உள்ள அவருக்கே இந்த தொகை என்றால் அவருக்கு முந்திய இடங்களில் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட தொகை கிடைக்கும்.