Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

‘இது’ இருந்தால் தான் ஊட்டி போக முடியும்…! செக்போஸ்ட் போட்ட அதிகாரிகள்


உதகை: ஊட்டி போக விரும்புவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இப்போது 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நடைமுறையில் உள்ளன. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். குறிப்பாக மாவட்டங்களுக்கிடையே பயணிக்க  இ பாஸ் கட்டாயமில்லை என்று அறிவித்தார்.

ஆனால் சூழலை பொறுத்து மாவட்ட நிர்வாகம் அதற்கான உத்தரவுகளை அமல்படுத்தலாம். அதன்படி, தற்போது நீலகிரி செல்ல இ பாஸ் கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி வருவோரிடம் இ பாஸ் உள்ளதா என்பதை கண்டறிய மாவட்ட எல்லையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் இறங்கி உள்ளனர். இந்த இ பாசானது நீலகிரி வரும் வெளி மாவட்ட நபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் திரும்புவர்களுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.  இதே நடைமுறை கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular