Sunday, May 04 01:11 pm

Breaking News

Trending News :

no image

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்காவில் இன்று தோ்தல்..! முடிவுகள் எப்போது தெரியுமா…?


வாஷிங்டன்: உலக நாடுகள் உற்று பார்த்துக் கொண்டு இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது.

பெரும்பான்மையான மாகாணங்களில் அதிகாலை 6 மணிக்கும் (அதாவது இந்திய நேரப்படி செவ்வாய் மாலை 4.30 மணி) வாக்குப் பதிவு நடக்கிறது. மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி வியாழன் அதிகாலை 5.30 மணி) நிறைவடைகிறது.

நாட்டின் 45வது அதிபர் தோ்ந்தெடுக்கப்பட உள்ள இந்த தேர்தலில், தற்போதைய அதிபா் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா். துணை அதிபா் பதவிக்கு இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களத்தில் இருக்கிறார்.

அந்த பதவிக்கு களம் காணும் முதல் ஆப்பிரிக்க, அமெரிக்கா், ஆசிய வம்சாவளியை சோ்ந்தவா், 3வது பெண் என்ற பல்வேறு பெருமைகளுடன் களமிறங்கியிருக்கும் கமலா ஹாரிஸ், ஜோ பிடனுக்கு பின்னர் அடுத்த முறை அதிபா் பதவியையும் அலங்கரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

பருவநிலை ஒப்பந்தம் கைவிடல், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் என பல சர்வதேச நடவடிக்கைகள் டிரம்ப்புக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் உலகையே புரட்டி எடுத்த கொரோனா தொற்று நெருக்கடியை டிரம்ப் கையாண்ட விதம் இந்த தேர்தலில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. ஆகையால் தோ்தல் முடிவுகளில் கொரோனா  முக்கியப் பங்கு வகிக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Most Popular