கணவர் தொகுதியில் களமிறங்கும் பிரேமலதா…! இதோ.. 60 வேட்பாளர்கள் லிஸ்ட்…!
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேமுதிக, அமமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி, 60 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. இப்போது அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் தலைவர் விஜயகாந்த், துணை செயலர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த தேர்தலில் களம் காணவில்லை.