பாஜக வேட்பாளரின் ‘அந்த’ வீடியோ…! பழசானாலும் படு வைரல்
தேர்தல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும் படை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். பிரச்சார கூட்டம், நோட்டீஸ் வினியோகம், மக்களை சந்திப்பது என தேர்தல் வியூகங்கள் ஒரு பக்கம் இருக்க.. வேட்பாளர்களின் கடந்த கால வீடியோக்களை தேடி பிடித்து இணையத்தில் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அதிகம் டேமேஜ் ஆகி இருப்பது பாமக. அப்புறம் பாஜக. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நேரம் முதலே பாமகவை உரித்து தொங்க விட்டனர் இணையவாசிகள். அப்புறம் பாஜக பக்கம் தேடி பிடித்து old is gold டைப்பில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக பெயர் அறிவிக்கப்பட்ட போதே அனைவராலும் பார்க்கப்பட்டவர் திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். வி. பால கணபதி. காரணம் இவரின் சில்மிஷ வீடியோ ஒன்று தான். அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருப்பது அந்த வீடியோவில் அப்பட்டமாக தெரியும்.
இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரைக்கும் ஏற்கனவே சென்று அப்போது பெரும் விமர்சனங்களையும், சர்ச்சையையும் உண்டு பண்ணியது. அது என்றோ நடந்தது என்றாலும், பால கணபதி என்றவுடன் இப்போது அதை தேடி பிடித்து எடுத்து எக்ஸ் தள வலைப்பக்கத்தில் ரிலீஸ் செய்து குசும்பு வேலை பார்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
வீடியோவை பார்த்த பலரும்… ஓ அவரா இவரு என்று ஞாபகப்படுத்திக் கொண்டாலும், மற்ற சிலர் திமுக மட்டும் ஒழுங்கா என்ற ரீதியில் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பேசிய வீடியோக்களை லைன் கட்டி வெளியிட்டு வருகின்றனர்.
இதை பார்க்கும் பலரும்.. ஒரே சேர கூறுவது… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற திரைப்பட வசனத்தைத் தான்…!