மாடு 'மேய்க்கும்' வேலையில் ஜாய்ன் பண்ணிய பிரபல டிவி தொகுப்பாளினி…! என்னாச்சு…?
பிரபல தொகுப்பாளினியான அறந்தாங்கி நிஷா மாடு மேய்க்க போன போது தமக்கு நடந்தது என்ன என்பதை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் வந்தவர் அறந்தாங்கி நிஷா. தொகுப்பாளினியான இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அது தவிர மேடைகளில் சிறப்பாக பேசும் திறமை பெற்றவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமது சிரிப்பு மற்றும் காமெடிகளால் அனைவரையும் கலகலப்பாக்கியவர். இந்த லாக்டவுன் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பல வீடியோக்களாக வெளியிட்டு அசத்தி உள்ளார்.
குறிப்பாக தாம் மாடு மேய்க்கும் காணொளி ஒன்றை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார். கொரோனா காலத்தில் புது வேலைக்கு ஜாய்ன் பண்ணியிருக்கேன்… மாடு மேய்க்கிற வேலை என்று பேசிக் கொண்டே மாடு மேய்க்கிறார்.
இது தவிர கணவர் சமையல் அறையில் சமைக்கும் போது என்ன புலம்பி கொண்டிருக்கிறார், ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியது என வீடியோக்களாக போட்டி கலக்கி தள்ளி இருக்கிறார்.