Sunday, May 04 11:59 am

Breaking News

Trending News :

no image

2 அறிக்கைகளும்… இறையன்பு ஐஏஎஸ்சும்…! கோட்டையில் ஒரு ‘TALK’…


சென்னை: தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு வெளியிட்டுள்ள சில அறிக்கைகள் அவர் மீதே பெரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் பேச்சுகள் உலா வருகின்றன.

10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் அளித்துள்ளனர். திமுகவுக்கு அரியணை வாய்ப்பு வழங்க முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் ஸ்டாலின். கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டும் இம்மியளவு கூட வந்து விடாதபடி சர்வ கவனமாக அரசை நடத்தி வருகிறார்.

புதிய அரசு என்பதால் வழக்கம் போல் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் பணியில் அமர்த்தப்பட்டார். நேர்மையான அதிகாரிகள் என்று பெயரெடுத்தவர்கள், மக்கள் மனங்களில் இடம்பெற்றவர்கள் என பலரும் பணி அமர்த்தப்பட்டதால் மக்களும் வரவேற்று உள்ளனர்.

படு பிசியாக இருக்கும் தலைமை செயலாளர் நிர்வாக ரீதியாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்து வருவதும் அறிந்த ஒன்று. அதன் ஒரு பகுதியாக அவர் சமீபத்தில் வெளியிட்டு இருந்த 2 அறிக்கைகள் பற்றி கோட்டை வட்டாரத்தில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.

நான் எழுதிய புத்தகங்களை எப்படிப்பட்ட அழுத்தம் யாரிடம் இருந்து வந்தாலும் அரசு திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்ற ஸ்டிரிக்டாக உத்தரவு போட்டுள்ளார். மற்றொரு அறிக்கை சாப்பாடு சம்பந்தப்பட்டது.

ஆய்வு பணிக்காக நான் வரும் போது தமக்காக ஆடம்பர உணவு ஏற்பாடுகளை செய்தால் போதும், சாதாரண காலை உணவு, 2 காய்கறிகளுடன் மதியம் சைவ சாப்பாடு, இரவு உணவு போதுமானது என்று கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார் இறையன்பு.

ஆஹா… சூப்பர் என்று இந்த 2 அறிக்கைகளும் பெருத்த வரவேற்பை பெற்றிருந்தாலும். வழக்கம் போல இதற்கும் எதிர்மறையான விமர்சனங்கள் கோட்டை பகுதியில் லைன் கட்டி எழ ஆரம்பித்துள்ளன. நேர்மையான,  கண்டிப்பான, மிஸ்டர் க்ளீன் அதிகாரி என்பது தமிழகம் அறிந்த ஒன்று. அதை வெளிகாட்ட வேண்டியது இல்லையே என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்து விட்டனராம்.

அடுத்து… ஆடம்பர உணவு வகைகள் பற்றி அவர் போட்ட உத்தரவு பற்றியது… முழுக்க, முழுக்க சைவ உணவு என்று ஏன் குறிப்பிட வேண்டும்? ஆய்வு மற்றும் அரசு பணிக்காக செல்லும் தருணத்தில் கலெக்டர்களிடம் கூறினாலே போதும். எதை சொல்லுவதற்காக இந்த அறிக்கை என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏன் சைவ சாப்பாடு சாதாரணமான ஒன்று, அசைவ உணவு ஆடம்பரமானது என்று எதன் அடிப்படையில் அளவுகோல் வைத்தார்..? 250 ரூபாய்க்கு பெரிய ஒட்டல்களில் ஒரு சைவ சாப்பாட்டின் விலை உள்ளது, அதே போன்று 250 ரூபாய்க்கு மட்டன், சிக்கன் பிரியாணிக்கு செலவாகும்.

ஆகையால் தமக்கான சாப்பாட்டு செலவு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்குள் இருந்தாலே போதும் என்று சொல்லியிருக்கலாமே, எதற்கு அறிக்கை வாயிலாக தெரியபடுத்த வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உயர்பதவி என்பதால் விமர்சனங்கள் இயல்பே, ஆனால் அனைத்தையும் புறம்தள்ளி நேர்மைக்கு மட்டுமே இறையன்பு முக்கியத்துவம் அளிப்பார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Most Popular