Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

என்னது..? கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டி ரத்தமா..?ஷாக் பின்னணி


டெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவாக்சினில் புதியதாக பிறந்த கன்றுக்குட்டியின் ரத்தம் கலக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு சுகாதார அமைச்சம் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் இப்போது கொரோனாவின் 2வது அலை சற்றே குறைந்திருக்கிறது. ஆனாலும் 3வது அலை கன்பார்ம் என்று மருத்துவ உலகம் கூறி உள்ளதை அடுத்த அனைத்த தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒன்று கோவாக்சின்… மற்றொன்று கோவிஷீல்டு. இதில் கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி பற்றி வெளியாகி உள்ள ஒரு தகவல் இப்போது ஒட்டு மொத்த மக்களையும் அதிர வைத்துள்ளது.

அதாவது, கோவாக்சின் தடுப்பூசியில் புதியதாக பிறந்த கன்றுக்குட்டியின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவம் ஒன்று கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு, விகாஸ் பட்னி என்பவர் ஆர்டிஐ மூலம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், கோவாக்சின் மருந்து மொத்த உற்பத்தியின் போது வேரா என்ற செல்களின் புத்துயிர் செயல்பாட்டுக்காக இளங்கன்றின் சீரம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந் நிலையில் இந்த தகவலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறி உள்ளதாவது: கோவாக்சின் தடுப்பூசியில் கன்றின் சீரம் பயன்படுத்துவது இல்லை, அது தடுப்பூசியின் மூலப்பொருளும் அல்ல.

மாடுகள், பிற விலங்குகளின் சீரம் (ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகையான திரவம்) வேரா செல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள். இந்த வேரா செல்கள் தடுப்பூசி உற்பத்தி உதவும். இந்த வகையான தொழில்நுட்பம் போலியோ, இன்புளுயன்சா, ரேபிஸ் போன்ற தடுப்பூசி உற்பத்திகளிலும் பின்பற்றப்படுகிறது.

வேரா செல்கள் வளர்ச்சி அடைந்த பின்னர் அதில் இருக்கும் கன்றுக் குட்டியின் சீரத்தை அகற்ற ரசாயனங்களில் கழுவப்படுகிறது. ஆகையால் தடுப்பூசி உருவாக்கத்தின் போது கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்துவது கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது.

Most Popular