இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தண்டவாள பராமரிப்பு பணிகள் முழுமை பெறாததால் மேலும் 2 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உதகை மலைரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ள நிவாரண பணிகளில் அதிக கவனம் செலுத்தாத ஏரல் வட்டாட்சியர் கைலாசநாத குருசாமி அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தொடர் மழை எதிரொலியாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சியில் இன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
581வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அரசின் தகவல்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் தரப்பட்டு உள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.