சென்னையில் இனி ரிலாக்ஸ் தான்..! 9 இடங்களில் புது நடவடிக்கை
சென்னை: சென்னையில் 9 இடங்களில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடை ரத்தாகும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக, சென்னையில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் வணிக வளாகங்கள் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் விதிக்கப்பட்டு உள்ள தடை நாளையுடன் முடிகிறது. அதன் காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மற்ற நகரங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.
முன்னதாக, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றுகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.