கையில் தட்டு.. வாயில் பிரியாணி…! அப்படியே நடந்து போன அமைச்சர்…!
மதுரை: கையில் தட்டுடன் வாயில் பிரியாணியுடன் தொண்டர்கள் புடை சூழ அமைச்சர் செல்லூர் ராஜூ வலம் வந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
தேர்தல் தேதி நெருங்க, நெருங்க மக்களிடம் அரசியல்வாதிகளின் நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி அமைச்சர்கள் செய்யும் சில நடவடிக்கைகள் ஏக மாஸாகி விடும்.
அப்படித்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ மக்களோடு மக்களாக வ்ரிசையில் நின்று பிரியாணி தட்டை கையில் பிடித்தவாறு சாப்பிட்டு கொண்டே கட்சியினரை நலம் விசாரித்தது வைரல் ஆகி உள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த காட்சியை தொண்டர்கள் கண்டு வியந்து போயிருக்கின்றனர்.
கூட்டம் முடிந்து போக கட்சியினருக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உள்ளே வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ லைனில் நின்று பிரியாணி வாங்கி தொண்டர்களுடன் நின்று கொண்டே சாப்பிட்டு அசத்தி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கையில் தட்டுடன் நின்று கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்த அவர் நேராக தரையில் அமர்ந்திருந்த பெண் தொண்டர்களிடம் சென்று பிரியாணி நல்லாயிருக்காம்மா… சாப்பிடுங்க என்று நலம் விசாரித்து இருக்கிறார்.
அமைச்சர் ஒருவர் பந்தா இல்லாமல் தொண்டர்களுடன் வரிசையில் நின்று தட்டில் பிரியாணி வாங்கி கொண்டு அவர்களுடன் நின்று கொண்டே சாப்பிட்டது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.