Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

ஒத்த சமோசாவால்.. மொத்த உயிரைவிட்ட இளைஞர்..!


மத்திய பிரதேசத்தில் சமோசாவால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் மிகவும் பேமசானது சமோசா. எங்கு பார்த்தாலும் எல்லா கடைகளிலும் சமோசா நம்மை வரவேற்கும். ஆனால் இந்த சாதாரண சமோசா ஒரு இளைஞரை சாகடித்து இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பந்தா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள சமோசா கடைக்கு போயிருக்கிறார் ஒரு இளைஞர். 2 சமோசாக்களை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

அனைத்தும் முடிந்த பின்னர் 15 ரூபாயை எடுத்து கடைக்காரரிடம் நீட்டி இருக்கிறார். ஆனால் அவரோ 20 ரூபாய் எடு தம்பி என்று சொல்லி உள்ளார். சாப்பிட்ட இளைஞரோ 15 ரூபாய் தானே…? எப்போது விலை ஏற்றினீர்கள்..? என்று சரமாரியாக கேட்டுள்ளார். கடைசியில் 15 ரூபாய் தான் தருவேன் என்று அவர் அடம்பிடித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற….. கடைக்காரர் போலீசில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான்… பக்காவாக பறந்து வந்த போலீசார் சமோசா இளைஞரிடம் விசாரித்து உள்ளது.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் நடந்தது தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. நேராக வீட்டுக்கு போன அந்த இளைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பொசுக்கென்று வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு பற்ற வைத்து கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் எவ்வளவோ முயன்றும்.. முடியவில்லை.. தீயில் கருகி அந்த இளைஞர் பலியாகிவிட்டார். ஒரு சமோசா பிரச்சனை.. ஒரு இளைஞரின் உயிரை சாப்பிட்டுவிட்டது தான் சோகம்…!

Most Popular