Sunday, May 04 12:43 pm

Breaking News

Trending News :

no image

காங்கிரசுக்கு டாட்டா..! முக்கிய தலைவர் அறிவிப்பால் சோனியா அதிர்ச்சி


டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகி உள்ளார்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி படிப்படியாக கரைந்து கொண்டே இருக்கிறது. பல மாநிலங்களில் அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் சிதறுண்டு கிடக்கின்றனர்.

இப்போது திடீர் திருப்பமாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் ராகுல் காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார். காங்கிரசில் கலந்து ஆலோசனை என்பதே இல்லாமல் போய்விட்டது. 2014ம் ஆண்டு காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தியின் குழந்தை தனமான நடவடிக்கைகள்.

அவரது நடவடிக்கைகளில் எந்த முதிர்ச்சியும் இல்லை. ராகுல் காந்தி கட்சியில் இணைந்த பின்னர் தான் அனைத்து மாற்றங்களும் அரங்கேறி இருக்கின்றன என்று கூறி இருக்கிறார்.

 

Most Popular