ஸ்கூல், காலேஜ் நாளை லீவு… சட்டென்று வெளியான அறிவிப்பு
சென்னை: தொடரும் கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விடாது அடித்து ஊற்றும் மழை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்தில் இருந்து சென்று முகாமிட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மழையின் தாக்கம் மேலும் நீடிக்கும் என்ற நிலையில் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை கலெக்டர் அம்ரீத் பிறப்பித்து உள்ளார். அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.