3 மாதங்கள் கடந்து பெட்ரோல், டீசலுக்கு வந்த நிலைமை… வாகன ஓட்டிகள் ஆச்சரியம்
சென்னை: 91வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமின்றி இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. அதன்படி, தினமும் விலை நிலவரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
விலை நிலவரங்கள் மாற்றப்படுவதால், ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். இந் நிலையில் கடந்த 90 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி உள்ளது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 காசுகளாக உள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 91.43 காசாக இருக்கிறது.
91வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.40, ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43 ஆக உள்ளது.