Aadhaar card: 100 யூனிட் இலவச மின்சாரம் கட்டா…? அமைச்சர் சொன்ன பதில்
சென்னை: ஆதார் எண் இணைப்பால் 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படுமா என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 2 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்த சிறப்பு முகாம் இம்மாதம் கடைசி வரை நடைபெறும். ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்ப்பதால் 100 யூனிட் இலவச மின் திட்டங்கள் ரத்தாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தகவல்களும் வலம் வருகின்றன. அப்படி ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை.
விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம், மின்சாரத்துறையை மேம்படுத்த 9048 கோடி ரூபாய் மானியத்தை கடந்தாண்டு முதலமைச்சர் அளித்தார். இந்த ஆண்டு 4000 கோடியை கூடுதலாக வழங்கி உள்ளார்.ஆகையால் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறி உள்ளார்.