பிரபல நடிகர் வீட்டில் வெளியான மரண செய்தி…! கலங்கும் திரையுலகம்
சென்னை: பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்ட அர்ஜூன் தாயார் லட்சுமி தேவம்மா காலமானார். அவருக்கு வயது 85.
அண்மைக்காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லட்சுமியின் உடல்நிலை மோசம் அடைந்தது.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அம்மாவை இழந்து வாடும் அர்ஜூனுக்கு ஏராளமான திரையுலக கலைஞர்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.