அழகிரி மகன் ஆஸ்பத்திரியில்…! கதறி ஓடிய குடும்பம்
சென்னை: அழகிரி மகன் துரை தயாநிதி பிரபல மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த சகோதரர் முக அழகிரி மகன் துரை தயாநிதி. சென்னையில் உள்ள தமது வீட்டில் அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக துரை தயாநிதி மயங்கி சரிய, குடும்பமே பதறி இருக்கிறது.
எவ்வித தாமதமும் இன்றி, உடனடியாக அவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாவும், மூளைக்கு செல்லும் ரத்த நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, ப்ரெய்ன் ஸ்ட்ரோக் என்று சொல்வது உண்டு மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
களத்தில் தீவிரமாக இறங்கிய மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை செய்திருப்பதாக தெரிகிறது. மருத்துவமனையில் இருக்கும் துரை தயாநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். மருத்துவர்களிடமும் உடல்நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்துள்ளார்.