BIG BOSS பிரபல நடிகை திடீர் மரணம்…! ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவரும், நடிகையுமான சோனாலி போகட் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். ரியாலிட்டி ஷோ என்பதால் இதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதிகளவு இந்தி மொழியில் தான் பிக் பாஸ் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. கிட்டத்தட்ட 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டு இருக்கின்றன.
இந் நிலையில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நடிகை சோனாலி போகட் திடீரென மாரடைப்பால் காலமனார். அவருக்கு வயது 41.
அரசியலில் தற்போது தீவிரமாக இறங்கி இருந்தார். 2019ம் ஆண்டு அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் கண்டு தோல்வியை சந்தித்தார். 14வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக களம் இறங்கி பிக் பாசை அசத்தியவர்.
கோவா சென்றிருந்த அவர் அங்கேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சோனாலி போகட்டின் இந்த எதிர்பாராத மரணம் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.