மாஜி மணிகண்டனை ஒளித்து வைத்த சிட்டிங் எம்எல்ஏ…? ‘கிறுகிறு’க்க வைக்கும் தகவல்
சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இத்தனை நாள் ஒளித்து வைத்து உதவி பண்ணியதே சிட்டிங் எம்எல்ஏ தான் ஒரு தகவல் வெளிவந்து காவல்துறையை கிறுகிறுக்க வைத்துள்ளது.
தம்மை கல்யாணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினார், கேட்டால் ஏமாற்றிவிட்டு ரவுடிகளை வைத்து மிரட்டினார் என்று நாடோடிகள் பட துணை நடிகை சாந்தினி போலீசில் புகார் தந்தார். கூடவே போட்டோகள், வாட்ஸ் அப் சாட்டிங் என சில ஆதாரங்களையும் போலீசுக்கு கொடுத்தார்.
தமிழகம் முழுவதும் இந்த புகார் பற்றி பேச்சானது. அதில் உண்மையில்லை என்று மறுத்த மாஜி மணிகண்டன் செனனை ஐகோர்ட்டில் முன்ஜாமீனுக்கு முயற்சித்தார். ஆனால் அவரது மனு டிஸ்மிஸ் ஆக போலீஸ் கைது செய்ய தேடியது
மதுரை, ராமநாதபுரம் என்று வலைவீசிய போலீஸ் கடைசியில் பெங்களூருவில் ஒரு பண்ணை வீட்டில் வைத்து பிடித்தது. ஆனால் அவர் எப்படி பெங்களூரு போனார்? உதவி செய்தது யார்? இத்தனை நாட்கள் எங்கிருந்தார் என்பது பற்றிய சில விவரங்கள் இப்போது அரசல், புரசலாக வெளியில் வர ஆரம்பித்துள்ளது.
முன்ஜாமீனுக்கு முயற்சித்த போதே மணிகண்டன் தமிழகத்தில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தாராம். யாரோ ஒருவரின் உதவியின்றி அவரால் எங்கும் தலைமறைவாக முடியாது.. யாராக இருக்கும் என்று சலசலப்புகள், சந்தேகங்களும் காவல்துறைக்கு சரமாரியாக எழுந்ததாம்.
அப்படி… இப்படி என்று இத்தனை நாள் தலைமறைவாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கே ஒரு சிட்டிங் எம்எல்ஏ தான் சகலமும் செய்து கொடுத்தாராம். கைது நடவடிக்கை எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது தான் இந்த விவரங்கள் எல்லாம் போலீசாருக்கு தெரிய வந்ததாம்.
தென்மாவட்டத்தை சேர்ந்த அந்த எம்எல்ஏ வீட்டில் தான் 10 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருந்தாராம் மணிகண்டன். அவருக்கு உதவியது இப்போது பவர்புல்லான தேசிய கட்சி ஒன்றில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறாராம். முன்ஜாமீன் கிடைக்காது என்று தகவல் வரவே… அங்கிருந்து சிட்டிங் எம்எல்ஏ ஆதரவுடன் பெங்களூருக்கு பறந்தாராம்.
கடைசியில் இப்போது மணிகண்டன் சிக்கி சிறைக்கு போனாலும் சிட்டிங் எம்எல்ஏ ஏன் உதவ வேண்டும்? பண்ணை வீட்டில் ஏன் தங்க வைக்க வேண்டும்? என்று கேள்விகளை போலீசார் எழுப்பி உள்ளனராம். வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கவும் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.