Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

தமிழக அரசை கலைக்க தயாராகும் சுப்பிரமணியன் சுவாமி…! ஆளுநருக்கு 'பரபர' கடிதம்…!


சென்னை: தமிழகத்தில் பிராமணர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என்று கூறி ஆளுநருக்கு பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

தேசிய அரசியலிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி… எப்போதும் அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் இப்போது பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழக அரசியலில் களம் புகுந்து இருக்கிறார்.

பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு உள்நோக்கத்தோடு நடவடிக்கை எடுத்தால், அரசு கலைக்கப்படும் என்று ஓபனாக எச்சரித்துள்ளார். இதுதவிர ஆளுநர் பன்வாரிலாலுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளதாக தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நாஜி படைகள் எப்படி ஜெர்மனி நாட்டில் யூதர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதோ, அப்படி ஒரு ஆரம்ப கட்டத்தை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று முழுதாய் ஒரு மாதம் கூட முடியாத நிலையில் ஆட்சியை கலைப்பேன் என்று சு.சுவாமி குதித்திருப்பது பெரும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது.

Most Popular