அரசுப் பணிகளில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கூடாது: சுப்ரீம்கோர்ட் அதிரடி
டெல்லி:அரசுப் பணிகளில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தொடர்ந்த வழக்கு ஒன்றில், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு தரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை எதிர்த்து, தமிழக அரசானது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
அரசு பணியிடங்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது, தகுதி, பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.