பிரபல நடிகருக்கு நேர்ந்த துயரம்…! மயங்கி விழ.. அலறிய படக்குழு
பிரபல முன்னணி நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் படக்குழுவில் பதற்றம் நிலவியது.
நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது.
இதை தொடர்ந்து, விஷால், மலையாள நடிகர் பாபு ராஜ் ஆகியோர் மோதும் அதி பயங்கர சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடிகர் விஷாலை பாபு ராஜ் அப்படியே அலேக்காக தூக்கி வீசுவது போன்று படம்பிடிக்க வேண்டும்.
படப்பிடிப்பின் போது பறந்து சென்று விழுந்த விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் அடைய… படப்பிடிப்புக் குழு அதிர்ந்து போனது. அப்படியே விஷால் மயங்கி சரிய… படக்குழு விஷாலை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தது.
மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து, பிசியோதெரபி எனப்படும் முடநீக்கவியல் சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் காயம் அடையும் காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது.