ரூ.150 கோடி வீடும்…! மகள்களின் சொத்து தகராறும்…! ரஜினிக்கு வந்த நிலைமை
சென்னை: மகள்களின் சொத்து தகராறால் நடிகர் ரஜினிகாந்த் கடுமையான மனவேதனையில் இருப்பதோடு, போயஸ் கார்டன் வீடு யாருக்கு என்றும் முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் மட்டுமல்ல… இந்திய திரையுலகத்தின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். அவரிடம் கால்ஷீட்டுக்காகவும், கதை சொல்வதற்காகவும் இன்னமும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத்து கிடக்கின்றனர்.
தற்போது அவர் அண்ணாத்த படத்தில் பிசியாக உள்ளார் என்று ஊரறிந்த விஷயம். 70 வயதிலும் அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் 100 கோடி. அவரின் 2 மகள்களுக்கும் அப்பா மீது கொள்ளை பாசம்.
ஆனால் ரஜினிக்கும், மனைவி லதாவுக்கும் இளைய மகள் சவுந்தர்யா மீது கொள்ளை பாசம். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இது நன்றாகவே தெரியும். அப்பாவை தாங்கு தாங்கு என்று தாங்கி கொண்டிருக்கும் இருவருக்கும் இடையே அப்பாவின் போயஸ் கார்டன் வீடு யாருக்கு சொந்தம் என்ற சண்டை வெடித்து கிளம்பி உள்ளதாம்.
இருவரும் ஆளுக்கு ஒரு வீட்டில் இருந்தாலும் ரஜினி நடிக்கும் படத்தின் சம்பளம் இருவருக்கும் தரப்படுகிறது. அதாவது ரஜினியின் கபாலி பட சம்பளம் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு தரப்பட்டது. அதே போன்று அடுத்த காலா படம் சம்பளம் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப்பட்டது.
இப்படி அப்பாவின் சம்பளத்தை பிரித்து கொடுத்து வரும் ரஜினிகாந்த் இப்போது வாழ்க்கையின் கடும் சோகத்தில் விழி பிதுங்கி நிற்கிறாராம். காரணம் மகள்கள் இருவரும் போயஸ் கார்டனில் உள்ள 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு அடித்து கொள்கின்றனராம்.
ஒரு கட்டத்தில் இந்த வீட்டுக்கு இருவருமே சண்டை போட்டு பெரும் விவகாரமாகிவிட, கடைசியில் அந்த வீட்டை தாம் அதிகம் பாசம் வைத்து இருக்கும் சவுந்தர்யாவுக்கு தருவதாக ரஜினி முடிவெடுத்துவிட்டாராம்.
அண்மையில் இது குறித்து உட்கார்ந்து பேசி முடிவெடுக்கப்பட்ட சமயத்தில் வாக்குவாதம் முற்றி பெரும் சண்டையாக மாறிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிய ரஜினிகாந்த், மூத்த மகளுக்கு தாம் வசிக்கும் அதே போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி தருவது என்று பேசி முடித்துள்ளாராம்.
பஞ்சாயத்தின் போது மூத்த மகள் மிகுந்த பிடிவாதமாக இருந்தாகவும், தமது கணவர் தனுஷ் மாஸ் நடிகர் என்றும், ஹாலிவுட் வரை நடித்து புகழ் பெற்றுள்ளதால் வீடு தமக்கே என்று மல்லுக்கு நின்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மகள்களால் ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை, மன வருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கோலிவுட்டில் கசிந்துவிட்டதாம்.
அப்பாவின் வீடு கிடைக்காமல் போனதால் அதிருப்தியில் இருக்கும் ஐஸ்வர்யாவையும், தனுஷையும் சமாதானப்படுத்தவே இருவருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டாராம் ரஜினி. அப்படி தான் 150 கோடியில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷ்க்கும் வீடு கட்டப்பட்டு வருகிறதாம். இந்த பிரம்மாண்ட வீடு கூடிய விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளது.
எப்பேர்ப்பட்ட உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சொத்து தகராறில் சிக்கி மனவேதனை அடைந்துள்ள ரஜினியின் நிலை பற்றித்தான் இப்போது கோலிவுட்டில் காதும்,காதும் வச்ச மாதிரி பேசப்படுகிறதாம்.