மகளிர் சுய உதவிக்குழுவுக்கு இனிப்பான செய்தி…! பிரச்சாரத்தில் ப்ராமிஸ் பண்ணிய ஸ்டாலின்
கோவை: திமுக ஆட்சிக்கு வந்ததும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பொள்ளாச்சி வந்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் வாங்கி உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களும் ரத்து செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பேசினார். முன்னதாக, திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டு இருந்தார்.