பிண அரசியல் சீமான்…! முட்டிக்கிட்ட நெட்டிசன்ஸ்
சாந்தன் மரண நிகழ்வு தொடர்பான சர்ச்சை ஒரு பக்கம் இருக்கும் நேரத்தில் பிண அரசியல் செய்வது நியாயமா சீமான்? என்ற கருத்து விவாதம் இணையத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது.
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் 2022ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தல் பேரில் விடுவிக்கப்பட்டார். பின்னர் திருச்சியில் இருக்கும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
ஜனவரியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சாந்தன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மரணத்தை அறிந்த பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை பிணவறை அருகே வைக்கப்பட்டு இருந்த சாந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இப்போது இந்த விவகாரம் தான் பேசப்படும் விவாதமாக உருமாறி இருக்கிறது.
அதாவது, சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சீமான், சிரித்துக் கொண்டே பிணவறை முன்பு செல்பிக்கு போஸ் தந்துள்ளார். தாம் செல்லும் இடங்களில் எல்லாம் எதற்கு சால்வை, இதனால் என்ன பிரயோசனம்? மரண நிகழ்வு தொடர்பான அஞ்சலிக்கு சென்றால் அரசியல் பேச்சு என்று லைம் லைட்டாக இருப்பவர் தான் சீமான். ஈழத்தமிழர் பிரச்னையை வைத்து பிண அரசியல் செய்வதாக அவர் முழங்கியதும் உண்டு.
ஆனால், அப்படி நரம்பு புடைக்க பேசும் சீமானுக்கு இந்த செல்பி பிண அரசியல் ரொம்ப முக்கியமா? அந்த போட்டோ தேவையா? என்று அதை பார்ப்பவர்கள் கரித்துக் கொட்டி வருகின்றனர்.
சிறந்த நடிகன், சால்வை போட வந்தவரிடம் நிதி கொண்டு வந்தியா? என்று கேட்டவர், பிணவறை திரள் நிதி கொடுக்கணும் தம்பி என்று இணையத்தில் போட்டோவை வைத்து அட்ராசிட்டி அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
இதை காணும் சீமானின் தம்பிகள், நாங்கள் மட்டும் என்ன சும்மாவா? என்று பதிலடி கொடுத்து இணையத்தை கலகலப்பாகி வருகின்றனர்.