பதவியேற்ற 8 மணி நேரத்தில் களம் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்…! அரண்டு போன அதிகாரிகள்..!
சென்னை: முதலமைச்சரான முதல் நாளில் சென்னை நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் வலம் வந்து அசத்தி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சராக ஒட்டுமொத்த தமிழகமும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்று கொண்டார். பதவியேற்று கொண்டவுடன் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.
பின்னர் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்று மலர்தூவி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்கிருந்து நேராக வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
அங்கிருந்து தலைமை செயலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். பதவியேற்ற 8 மணி நேரம் கூடாத நிலையில் முதல் வேலையாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் சுறுசுறுப்பாக இயங்கினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அங்கிருந்து படுக்கைகயின் விவரங்கள், சிகிச்சை முறைகள், ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை நடந்து சென்றே பார்வையிட்டார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். பதவியேற்று 8 மணி நேரம் கூட முழுதாக முடியாத நிலையில் கொரோனா ஒழிப்பு பணியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின் கண்டு சிகிச்சை மையத்தில் உள்ளவர்களும், அதிகாரிகளும் வெலவெலத்து போயுள்ளனர்.