கதம்.. கதம்.. எல்லாம் முடிந்தது…! கவிழ்ந்தது நாராயணசாமி அரசு…
புதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்துள்ளார்.
ஏக பரப்பரப்பிலும், ஊசலாட்டத்திலும் இருந்த புதுச்சேரி காங்கிரஸ் அரசு இன்று கவிழ்ந்தது. காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி முன் மொழிந்து பேசினார்.
அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்த நிலையில் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.