ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி வென்ற எடப்பாடி பழனிசாமி…! எதில் தெரியுமா…?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் டாப் 10 வேட்பாளர்களில் திமுகவினரே அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்று 2வது நாள் என்றாலும் அதை பற்றிய பேச்சுகள் இன்னமும் ஓயவில்லை. 234 தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களை பற்றிய ஏதாவது ஒரு விவரம் வெளியாகி வருகிறது.
இந் நிலையில் தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பற்றிய விவரங்களில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. டாப் 10 வேட்பாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் திண்டுக்கல் ஐ பெரியசாமி. ஆத்தூர் தொகுதியில் இவர் பெற்ற வாக்குகளை பார்த்தால் மலைப்பு தட்டுகிறது.
அதாவது, தமிழகத்தில் அதிகளவாக பாமக வேட்பாளர் திலகபாமாவை 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார். 2வது இடத்தில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எவ வேலு பாஜகவின் தணிகைவேலை 94, 673 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
3வது இடத்தில் பூந்தமல்லி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி உள்ளார்.இவர் 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவின் ராஜமன்னாரை சாய்த்துள்ளார். 4வது இடத்தில் எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
5வது இடத்தில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கேஎன் நேரு உள்ளார். அவர் 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். 6வது இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளார். இவர் கொளத்தூர் தொகுதியில் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவரை தொடர்ந்து அவரது மகன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 7வது இடத்தில் இருக்கிறார்.
8வது இடத்தில் திருச்சுழியின் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, 9வது இடத்தில் திருக்கோயிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி, 10வது இடத்தில் மண்ணச்ச நல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.