Sunday, May 04 12:04 pm

Breaking News

Trending News :

no image

கவலையை விடுங்க… கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்கும் மீனை பாருங்க…! வைரல் வீடியோ


கிச்சு கிச்சு மூட்டினால் மீன் ஒன்று சிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் சூப்பராக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

மனித குலத்துக்கு சொந்தமானது ஒன்று இருக்கிறது என்றால் அது சிரிப்பு. இந்த உலகத்தில் சிரிக்க தெரிந்த ஒரு மிருகம் என்றால் அது மனிதன் தான் என்று கூறுவது உண்டு.

ஆனால் ஒரு மீன் சிரிக்கிறது என்றால்… அதுவும் உயிரோடு இருக்கும் போது வாயை பொளந்து கொண்டு சிரிக்கிறது என்றால் எப்படி இருக்கும்..? கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா..?

ஆனால் உண்மையிலேயே மீன் ஒன் வாயை பொளந்து கொண்டு சிரிக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அமெரிக்காவில் உள்ளது பாஸ்டன் மாகாணம். இந்த மாகாணத்தின் கோட் வளைகுடா பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது பெயர் ஜெப்ரி.

மீனுக்கு வலை வீசிய ஜெப்ரி வலையில் வித்தியாசமான ஒரு மீன் வந்து மாட்டி இருக்கிறது. அந்த மீனை பிடித்து உற்று பார்த்தவர் வேறு விதமாக யோசித்து இருக்கிறார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அந்த மீனுக்கு தமது கைகளால் கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறார். அவ்வளவு தான்… பச்சிளம் குழந்தை பொக்கை வாய் திறந்து சிரிப்பது போன்று மீனும் வாயை திறந்து அழகாக சிரித்து தள்ளி இருக்கிறது.

இணையத்தில் இந்த வீடியோ வெளியாக அவ்வளவு தான். எத்தனை லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்று கணக்கிட முடியாத அளவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. மீனை எப்படி சிரிக்க வைக்க வேண்டும் என்று தெரியுமா? என்று பின்னணியில் குரல் ஒலிக்க… மீனும் சிரிக்க அப்பப்பா… குழந்தைகள் பார்த்து குதூகலிக்க ஆரம்பித்து உள்ளன.

ஆனால் வழக்கம் போல இணையத்தில் தட்டி தூக்கும் நெட்டிசன்ஸ், மீனை துன்புறுத்துவதாக கூறி விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் மீனின் அந்த செய்கை அழகோ… அழகு…!

Most Popular