ஆபாச வீடியோ அனுப்புறீயா..? நறுக் தான்…! அரிவாளுடன் வீடியோ போட்ட கட்சி தலைவி
சென்னை: ஆபாச வீடியோ அனுப்பி வரும் இளைஞர்களின் ஆணுறுப்பை நறுக்கிவிடுவேன் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சுமி பேசியிருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பை நடத்தி வருபவர் வீரலட்சுமி. சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர். இவர் அண்மையில் மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனையில் இருந்துள்ளார். அப்போது இவருக்கு செல்போனுக்கு ஆபாச வீடியோ ஒன்று வந்துள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து இதே போன்று ஆபாச அழைப்புகள், விடியோக்கள் வருவதால் எரிச்சலுற்ற அவர் காவல்நிலையத்திலி புகார் அளித்துள்ளார். ஆனால் பலன் இல்லை.
இந் நிலையில் அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி இருக்கிறது. காரணம் அவர் கையில் அரிவாளுடன் பேசி இருக்கும் விஷயம்தான்.
அவர் பேசியது இதுதான்: எனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 2 பேரும் போலீசில் சரண் அடைய வேண்டும். அப்படி சரண்டர் ஆகாவிட்டால் இஸ்லாமிய நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனை போன்று ஆணுறுப்பு அறுக்கப்படும்.
15 நாளில் அவர்களுக்கு தர உள்ள தண்டனைக்காக தமக்கு வீர தீர செயல் விருது தர வேண்டும். தமக்கு அரசியல், பணம், படை என பலம் உள்ளது. கேஸ் வந்தால் நடத்தி கொள்வேன். இதுவே சாதாரண பெண்ணுக்கு நடந்தால் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரிவாளுடன் வீரலட்சுமி பேசும் வீடியோ வைரலாகி உள்ளது.