அரையாண்டு தேர்வு இல்லை…? மாணவர்கள் ‘ஷாக்’
சென்னை: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையின் எதிரொலியாக அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மிக்ஜாமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஜாம் ஆக்கிவிட்டது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை எதிரொலியாக குடியிருப்புகளில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நிவாரண முகாம்களாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு நாளை அரையாண்டு தேர்வு அறிவித்தப்படி நடக்க வேண்டும். ஆனால் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முறையான அனுமதியுடன் அரசின் தெரிவித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.