இந்தியர்கள் இங்கே வரக்கூடாது..! அதிரடி தடை போட்ட ‘அந்த’ நாடு…!
கொழும்பு: இந்தியர்கள் இலங்கை வர அந்நாடு அதிரடியாக தடை விதித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பு என்பது இப்போது 4 லட்சத்தை கடந்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வட இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நாள்தோறும் மரணங்களும் அதிகரித்து வருவதால் சுடுகாட்டில் ஒரே தகன மேடையில் 4 அல்லது 5 சடலங்களை வைத்து எரிக்கும் நிலை இருக்கிறது.
தென் இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. பரவலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந் நிலையில் இந்தியாவில் இருந்து யாரும் இலங்கை சென்று வர அந்நாடு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என்று இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வர தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.