சரவண பவன் ஓட்டல் சாம்பாரில் பல்லி...! வாடிக்கையாளர்கள் ஷாக்..! வெளியான வீடியோ
டெல்லி: டெல்லியில் சரவண பவன் ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது.
டெல்லியின் கன்னாட் பிளேசில் தென்னிந்தியாவின் பிரபலமான சரவண பவன் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட சென்றார்.
அவர் தென்னிந்திய உணவு ஒன்றை ஆர்டர் செய்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சாம்பரில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தை அவர் வீடியோ எடுக்க சமூக ஊடகங்களில் அது வைரலாகியது. .
அந்த வீடியோவில், உணவக ஊழியர்களாக சிலர் கத்துவதும், மேலாளர் வாடிக்கையாளர்களிம் இருந்து ஓடி வருவது என பல காட்சிகள் பதிவாகி உள்ளன.
வாடிக்கையாளர் இது குறித்து உணவகம் மீது புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உணவக ஊழியர்கள், சமையலுக்கு பயன்படுத்திய பொருட்கள் விவரங்களை கேட்டுள்ளனர்.