ஜெ. க்கு கடன்… எங்கிட்ட ரூ.2 கோடி கேட்டார்..! குண்டு வீசிய ஓபிஎஸ்
கோவை; காசில்லாமல் எங்கிட்ட 2 கோடி ரூபாய் தருமாறு ஜெயலலிதா கேட்டார் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.
ஜெயலலிதா என்றவுடன் அதிமுக மட்டுமல்ல…. மற்ற அனைத்து கட்சி தொண்டர்களும் சற்றே நிமிர்ந்து உட்கார்வார்கள். அதிமுகவில் கட்சியின் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை ஜெயலலிதாவிடம் மிகுந்த மரியாதையுடன் இருப்பார்கள்.
அவர்களில் நம்பிக்கை, விசுவாசம் என்ற அடையாளத்துக்கு உரியவர் என்று ஜெயலலிதாவிடம் பெயர் எடுத்தவர் ஓ பன்னீர்செல்வம். அவர் தற்போது அதிமுகவில் இல்லை… கட்சி யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிசாமி, அவர் இடையே இன்னமும் சட்ட யுத்தம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
அது ஒரு பக்கம் இருந்தாலும் லோக்சபா 2024 தேர்தலுக்கு தொண்டர்களுடன் தயாராகி வருகிறார் ஓபிஎஸ். அதற்காக கோவையில் ஆலோசனை கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தார். அவரது சுற்றுப்பயணம் இன்று தொடங்கி அடுத்த மாதம் 24ம் தேதி முடிகிறது.
கோவையில் இன்று தொடங்கிய தமது பயணத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில அவர் பேசினார். அதுதான் இப்போது talk of the politics ஆக மாறி இருக்கிறது. மேடையில் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா கடன் சுமையால் தவித்தார், தம்மிடம் கட்சி நிதி 2 கோடி ரூபாயை கடன் கேட்டார் என்று கூறி கொளுத்தி போட்டு இருக்கிறார்.
ஓபிஎஸ் பேசியதாவது; எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நம்மை நம்பி தான் கட்சியை வளர்த்தனர். சாதாரண ஒருவனான நான் எப்படி முதலமைச்சராக ஆகி இருக்க முடியும்?
அதிமுக சரித்தரத்தில் 12 ஆண்டுகள் பொருளாளராக இருந்த ஒரே நபர் நான்தான். நான் பொருளாளராக பதவியேற்ற போது கட்சியின் நிதியில் 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது.
அதன் நான் எனது நடவடிக்கையால் 4 கோடி ரூபாயாக மாற்றினேன். ஒருநாள் என்னை ஜெயலலிதா அழைத்தார். எனக்கு நிதிச்சுமை இருப்பதாக கூறினார். வழக்குகள் தொடரப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு பணம் தரவேண்டும், என்னிடம் 2 கோடி ரூபாய் கடன் கேட்டார்.
உண்மையில் நாம் கண்ணீர்விட வேண்டிய நிகழ்ச்சி. 2 கோடி ரூபாய் பணத்தை 1 மணிநேரத்தில் திருப்பி தந்துவிடுகிறேன் என்று என்னிடம் கூறினார். நான் பணம் தந்தேன்… ஒரே மாதத்தில் அந்த பணத்தை என்னிடம் திருப்பி தந்தார். இதுதான் வரலாறு.
இன்றைக்கு எங்களை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, பொதுக்குழு நடக்கிறது. கட்சியை அபகரிக்கும் நடவடிக்கை தொடங்கி இருக்கிறது என்று பேசினார்.
ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு அதிமுக மத்தியில் மட்டுமல்லாது மற்ற கட்சியினரிடமும் லேசாக புகைய ஆரம்பித்து இருக்கிறது. அதாவது, காசில்லாமல் ஜெயலலிதா 2 கோடி ரூபாய் கடன் வாங்கி அப்புறம் திருப்பி தந்தாரா? நல்லா உருட்டு, உருட்டு என்று கிண்டலடிக்க ஆரம்பித்து உள்ளனர்.