Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

100 ஆண்டுகள் கடந்தும் எஸ்பிபி குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்…!


சென்னை: 100 ஆண்டுகள் கடந்தும் எஸ்பிபி குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக மறைந்த எஸ்பிபிக்கு ஏராளமானோர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று மிகவும் சோகமான நாள். கடைசி நிமிடம் வரை தனது உயிருக்காக போராடிய எஸ்பிபி நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

எஸ்பிபியினுடைய பாட்டிற்கும் குரலிற்கும் ரசிகர்கள் இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள் அவருடைய பாட்டை விட குரலைவிட அவரையே நிறைய ரசித்தார்கள். அதற்கு காரணம் அவருடைய மனிதநேயம். சின்னவர்கள், பெரியவர்கள் என பாராமல் அனைவரையும் மதித்தார். கவுரவம் கொடுத்தார்கள், அன்பு கொடுத்தார்கள்,

அவ்வளவு பெரிய அன்பான நல்ல ஒரு மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப் பெரிய பாடகர்களை உருவாக்கியுள்ளது.  மாம்பலம் ரவி, கிஷோர் குமார், கண்டசாலா, டிஎம் சவுந்திரராஜன் ஆகியவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு , நமது எஸ்பிபிக்கு உண்டு. அவர்கள் எல்லாரும் குறிப்பிட்ட மொழியில் மட்டுமே பாடினார்கள்.

ஆனால் எஸ்பிபியோ பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தென்னிந்திய மக்களுக்கு அவரை தெரியும். அவருடைய ரசிகர்களே இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அவருடைய இனிமையான குரலை ரசித்தார்கள். கம்பீரமான அந்த குரல் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் கூட நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த குரலுக்கான உரிமையாளர் இனி நம்முடன் இல்லை என நினைக்கும் போது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ரஜினிகாந்த் தனது இரங்கல் வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.

Most Popular