Sunday, May 04 01:03 pm

Breaking News

Trending News :

no image

பிரசவத்தில் ஒரு உலக சாதனை..! நம்பித்தான் ஆகணும்…!


பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்கா நாட்டில் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் கோஷியாமி தமாரா சித்தோல். 37 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவம் நடந்தது. ஆனால் அதில் அவர் ஒரு உலக சாதனையையும் படைத்திருக்கிறார்.

பிரசவத்தில் என்ன சாதனை என்று கேட்க தோன்றுகிறதா…? ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று தள்ளியிருக்கிறார். 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள். இப்போது அம்மாவும், 10 குழந்தைகளும் நன்றாக இருக்கின்றனர். 10 குழந்தைகள் இல்லாமல் ஏற்கனவே இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.

இதற்கு முன்னதாக மாலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றதுதான் உலக சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை திமோல் முறியடித்து அசத்தி உள்ளார். மருத்துவ உலகில் இது ஒரு பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Most Popular