அமலாக்கத்துறையை ‘அல்லுவிட்ட’ நம்மூரு போலீஸ்…!
திண்டுக்கல்: மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை தமிழக போலீசார் தமது கண்ட்ரோலில் கொண்டு வந்திருக்கின்றனர்.
திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்திருந்தது. விசாரணை முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் வழக்கை கையில் எடுக்காமல் இருக்க அந்த துறையின் முக்கிய அதிகாரி அங்கித் திவாரி என்பவர் டாக்டர் சுரேஷ் பாபுவை அணுகியதாக தெரிகிறது.
இதற்காக லஞ்சமாக பேசப்பட்ட தொகை ரூ.1 கோடி என்றும், முதல் கட்டமாக 20 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மேலும் 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக அங்கித் திவாரி கேட்டு வைக்க, லஞ்சத்துறையிடம் போயிருக்கிறார் சுரேஷ் பாபு.
அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, அங்கித் திவாரியை துரத்தி சென்று நடுரோட்டில் பிடித்து கைது செய்தனர். 31 லட்சமும் கைப்பற்றப்பட தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது.
அவரிடம் வழக்கமான பாணியில் விசாரித்த போலீசார், அடுத்து அவரை வீட்டை குறி வைத்தனர். விடிய , விடிய அவரது வீட்டை சல்லடையாக்க, ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
அவரின் வீடு மட்டுமல்லாது மதுரை அமலாக்கத்துறை அலுவலக அறையிலும் சோதனை நடத்தி 3 லேப்டாப்களை அதிகாரிகள் கொண்டு போயிருக்கின்றனர். இனி அடுத்தக்கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நடக்கும் என்பது தான் கிளைமாக்ஸ்.