Sunday, May 04 12:44 pm

Breaking News

Trending News :

no image

#தட்டேந்தி_நிம்மி பேரிடர் முக்கியமல்ல.. பெருமாள் தான் முக்கியம்…!


தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெருமாளுக்கு முக்கியத்துவம் தந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

அண்மையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.

தலைநகர் பாதிப்பை விட தென்தமிழகத்தில் காணப்பட்ட பாதிப்பு தான் ரொம்பவும் அதிகம். அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடைய பல மாதங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனம்.

மக்களின் துயர் துடைக்க, நிவாரண நிதி வேண்டும், இந்நிகழ்வை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் வலியுறுத்தல். ஆனால், தமிழக மக்களின் மனதில் பச்செக் என்று ஒட்டிக் கொள்ள கிடைத்த வாய்ப்பை வாசலில் தண்ணீர் தெளிப்பது போல ஏகத்துக்கும் கிண்டல் செய்தும், பாராமுகம் காட்டியும் பாஜக கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறது.

மக்களின் கஷ்டங்களின் போது கை கொடுத்தால் போது, ஓட்டு வங்கி எகிறும் என்ற அடிப்படை புரிதலில் இருந்து விலகி, ஆளும் திமுக அரசுக்கு கெட்ட பெயர் வர வைத்தால் போதும்… ஒட்டு மொத்த ஓட்டும் தாமரைக்கு விழும் என்று பாஜக நினைக்கிறது என்று சாமானிய அரசியல் அபிமானிகளும் பேசுவது நின்றபாடில்லை.

ஏக கண்டனங்கள், வலியுறுத்தல்களுக்கு இடையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி வந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டார். அங்கும் மறுபடியும் அழுத்தமாக சொன்னார்… இந்த சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று.

அவரின் பேச்சு தமிழக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்க, தென்மாவட்டம் வந்த நிர்மலா சீதாராமன் கோவில் ஒன்றில் பேசிய வீடியோ தான் இப்போது top viral.

பெருமாள் கோவில் ஊர்வலத்தின் போது தெருவில் சாலை சரியாக இல்லை என்று அங்குள்ளோர் அவரிடம் பேச… அதற்கு தீர்வும் தருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது சாலை வசதி அல்லது அந்த பிரச்னைக்கு தீர்வு காண உண்டியலில் காசு போட வேண்டாம், எங்கு கொடுக்கணுமோ அங்கே கொடு என்று அங்குள்ள ஒருவரிடம் அறிவுறுத்துகிறார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த வீடியோவை அங்குள்ள ஒருவர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட, டிரெண்டிங்கோ டிரெண்டிங்காகி வருகிறது. வீடியோ மட்டும் அல்லாது… #தட்டேந்தி_நிம்மி என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி நெட்டிசன்கள் பொளந்து கட்டி வருகின்றனர்.

நிவாரணம் தருவார், ஏதேனும் அறிவிப்பார் என்று பார்த்தால் உண்டியலில் காசு போடாதே, தட்டுல போடு என்கிறார்,உண்டியல்னா கசக்குதா? தட்டுன்னா இனிக்குதா? உண்டியலில் போட்ட கணக்கு கரெக்டா காட்டணுமே? என்றும் கமெண்டுகளை அள்ளிவிட்டபடி உள்ளனர்.

இந்த கமெண்டுகளுக்கு காரணமான அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular