Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

ஜெயலலிதா பிறந்த நாள் முதல்…! கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்….!


சென்னை: வரும் 24ம் தேதி முதல் சட்டசபை தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சியினர், தலைமைக்கழகத்தில் வரும் 24 புதன்கிழமை முதல் மார்ச் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

விருப்ப மனுவுக்கு தமிழகத்தில் ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5,000, கேரளாவில் ரூ.2,000 ஆயிரம் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Most Popular