பாமக வேட்பாளர்கள்…! அன்புமணி எங்கே போட்டி…?
பாமக நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஆச்சரியப்படும் வகையில் அன்புமணி ராமதாசின் பெயர் இல்லை.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது பாமக. அதிமுகவிடம் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, பாஜகவிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை என்று இரட்டை சவாரி செய்து ஒருவழியாக பாஜக கூட்டணிக்குள் பாமக வந்தது.
அந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தற்போது அதில் போட்டியிடும் வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் தருமபுரியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி பெயர் இதில் இல்லை.
வேட்பாளர்கள் விவரம்:
திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
-------
காஞ்சிபுரம் தனி தொகுதிக்கான வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் பெயர் விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.