பாஜக, அதிமுகவை ஓட விட்ட போலீஸ்…! பகீர் வீடியோ
போலீசாரின் லத்தியடி எப்படி இருக்கும் என்ற அனுபவம் பலருக்கும் இருக்காது. அதற்கு இதுதான் சரியான தருணம் என்பது போல, உதகையில் வேட்பு மனு தாக்கலின் போது பாஜக, அதிமுகவை போலீசார் ஒரு காட்டு காட்டி இருக்கின்றனர்.
லோக்சபா 2024 தேர்தலில் நீலகிரி தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் ஆ. ராசா, அதிமுகவில் முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், பாஜகவில் மத்திய அமைச்சர் எல். முருகன் களம் கண்டுள்ளனர்.
இன்று பாஜக வேட்பாளர் எல் முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழக தலைவர் அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் தொண்டர்களுடன் உதகை ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருக்கிறார். பாஜக கூட்டத்தினர் பின்னாடியே அதிமுகவினர் வந்ததால் அங்கு திடீர் பதற்றம் உருவானது. இருகட்சியினரும் இஷ்டம் போல் எதிர் எதிர் முழக்கங்களை எழுப்ப டென்ஷன்.
மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அதிமுக மற்றும் பாஜகவினரை கலைந்து போக சொல்ல, யாரும் நகர்ந்தபாடில்லை. வேறு வழியின்றி இருதரப்பினரையும் லத்தியால் காட்டு காட்டி துரத்தியடித்தனர். வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர் இதையறிந்த அண்ணாமலை, எல். முருகன் இருவரும் தொண்டர்களுடன் மறியலில் இறங்கினர்.
காவல்துறை அதிகாரி மன்னிப்பு கேட்டால் மட்டுமே நகர்வோம் என்று பிடிவாதம் பிடிக்க…வேறு வழியின்றி அவர் வருத்தம் தெரிவிக்கவே நிலைமை சுமூகமானது. இதேபோன்று அதிமுகவினரிடமும் எஸ்பி வருத்தத்தை பதிவு செய்ய கூட்டம் கலைந்து போய், அமைதி நிலவியது.
இந்த லத்திசார்ஜ் வீடியோ செய்தியின் கீழே பார்வைக்காக பகிரப்பட்டு உள்ளது.