வாயை பொளந்து தூங்கிய பெண்…! உள்ளே போன 4 அடி ஜந்து…! எடுத்து பார்த்தால்..?
மாஸ்கோ: ரஷ்யாவில் பெண் ஒருவர் வாய்க்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷிய நாட்டில் லவாசி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் தமது வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது தனது வாயினுள் ஏதோ ஊர்ந்த செல்வது போன்ற உணர்வு ஏற்பட, தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்துள்ளார். உள்ளே சென்ற அது, வயிற்றுகள் சென்று அடைந்து கொண்டது.
வயிறு வலி அதிகமாகவே, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வாயின் வழியாக எண்டோஸ்கோப் கருவியை பொருத்தி வயிற்றில் இருப்பது எது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
பின்னர் அவரது வயிற்றில் உள்ள அந்த உயிரினத்தை வெளியே எடுத்தனர். அந்த உயிரினம் 4 அடியில் இருந்த பாம்பு ஆகும். அதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அலறி அடித்து ஓடி உள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாய் வழியாக பாம்பு வயிற்றில் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.