எங்கள சேர்த்துக்குங்க..! திமுகவுக்கு 12 அதிமுக அமைச்சர்கள் தூது..! பகீர் தகவல்
சென்னை: திமுகவில் தாமும் 12 அமைச்சர்களும் இணைய தயாராக உள்ளோம் என்று அதிமுகவின் முக்கிய அமைச்சரான ஜெயக்குமார் தூது விட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை தந்துள்ளது.
தேர்தல் காலம் விரைவில் வர இருப்பதால் கட்சி மாறும் காட்சிகள் இப்போது அரங்கேறி வருகின்றன. அதில் அதிக சேதாரம் கொண்ட கட்சி திமுக எனலாம். முதலில் விபி துரைசாமி பாஜகவுக்கு போனார். இப்போது சிட்டிங் எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் சேர உள்ளார்.
அதே போல அதிமுகவில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் பாஜக, திமுகவில் இணைய தூதுவிட்டுள்ளனர். இப்போது லேட்டஸ்ட் தகவல் திமுகவில் சேருகிறோம் என்று அதிமுகவின் முக்கிய அமைச்சர் ஜெயக்குமார் தூதுவிட்டிருக்கிறார் என்பது தான்.
இந்த தகவல் வெளிவந்ததே ஒரு சுவாரசியமான சம்பவம். பிரபலமான தொலைக்காட்சியில் ஒரு விவாதம் ஒளிபரப்பானது. அதில் பேசியவர் திமுகவின் வழக்கறிஞரும், செய்தி தொடர்பாளாரான கண்ணதாசன். திமுக பிரமுகர்களுக்காக வாதாடுபவர்களில் முக்கிய நபர்.
இவர் தான் இந்த தகவலை போட்டு உடைத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் திமுகவில் இணைய தூது விட்டனர், திமுகவில் இணைய தூதுவிட்டதை முடிந்தால் அமைச்சர் ஜெயக்குமார் மறுக்கட்டும் என்று சவால் விட்டுள்ளார்.
சசிகலா விடுதலையானால் அதிமுக அவரது கைக்கு சென்றுவிடும் என்பதால் இந்த அமைச்சர்கள் தூது படலம் பற்றிய தகவல் வெளியில் வந்துள்ளது. சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்பட பலர் திமுகவில் இணையும் வாய்ப்பு இருப்பதாக திமுக செய்தி தொடர்பாளர் கண்ணதாசன் இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.