ஹெச். ராஜா… ஒரு வெறி பிடிச்ச… குலைக்கிற நாய்…!
மதுரை: ஹெச் ராஜா ஒரு வெறி பிடித்த குலைக்கிற நாய்.. அவரை பற்றிய கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொங்கி இருக்கிறார்.
அமைச்சர்களாகிவிட்டால் சிலர் உடனடியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வர். அப்படிப்பட்ட அமைச்சர்கள் பட்டியலில் தற்போது மாட்டிக் கொண்டு இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பற்றி சில கருத்துகளை பேசி இருந்தார்.
அவரின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் தறிகெட்டு ஓடியது. அதே நேரத்தில் அவரது இந்திய குடியுரிமை குறித்து விவரங்கள் பதிலுக்கு எழுப்பப்பட்டன. பாஜகவின் மூத்த பிரமுகரான ஹெச் ராஜா ஒருபடி மேலே போய், தியாகராஜன் வாயை மூடாவிட்டால் அவரது பூர்வீகம் பற்றி கிண்டி கிளறப்படும் என்று ஆவேசம் காட்டியிருந்தார்.
ஹெச் ராஜாவின் இந்த பேச்சுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக பதிலடி தந்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது இப்படி பொங்கியிருக்கிறார். அவர் தமது பேட்டியில் கூறி இருப்பதாவது:
புதியதாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறேன். 5 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட உள்ளோம். உங்களுக்கு(செய்தியாளர்களுக்கு) எல்லாம் இந்த சமயத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதை நீங்கள் அனைவரும் நல்ல விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தகுதியான மனிதர்களை பற்றி கேள்வி கேளுங்கள்… பதில் சொல்கிறேன். வெறிபிடிச்ச நாய் (ஹெச் ராஜாவை தான் அப்படி குறிப்பிடுகிறார்) பற்றி எல்லாம் என்னிடம் வந்து கேட்டால் எப்படி? நான் ஒரு அமைச்சர். எதற்கு பதில் தெரிவிக்க வேண்டும், சொல்லக்கூடாது என்று லிமிட் உள்ளது. இந்த மாதிரி நாய் (ஹெச் ராஜா) குலைப்பதற்கு நான் பதில் கூறவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி உள்ளது.