Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

2 மாசம்தான்… எடப்பாடி இருக்க போகும் இடமே வேற…!


சென்னை: இரண்டு மாதங்களில் எடப்பாடி எங்கு இருக்கிறார் என்பதை பார்ப்போம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறி உள்ளார்.

அதிமுகவில் இனி எடப்பாடி பழனிசாமி என்ற ஒற்றை தலைமை ராஜ்ஜியம் என்பது நேற்று முடிவாகிவிட்டது. இடைக்கால பொது செயலாளராகிவிட்ட நிலையில் பொது செயலாளருக்கான தேர்தல் விரைவில் நடக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி வைத்துள்ளோம். ஒரு வாரம் கட்சி தலைமை அலுவலகத்தில் கத்தி, கம்பு, சோடா பாட்டில்களுடன் வலம் வந்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

நாங்கள் அடியாட்களை அழைத்து வரவில்லை. ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் தான் இப்படி செய்தனர். ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு ஆட்களை அடிக்க கற்களை ஆட்டோவில் எடுத்து வந்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சைதை பாபு காயம் அடைந்து சீரியசாக உள்ளார்.

ஆனால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 சும்மா பாண்டேஜ்களை கட்டிக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கின்றனர். பொதுக்குழுவில் வெறும் 700 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் கணக்கு காட்டியதோ வேறு. கிட்டத்தட்ட 1700 பேர் வரவே இல்லை.

எடப்பாடியின் ஆட்சியின் போது கொடநாடு கொலை, கொள்ளை அரங்கேறியது. ஆனால் அந்த வழக்கில் முறையாக விசாரணை நடக்க வில்லை. குற்றவாளி கூண்டில் ஏறவேண்டுமோ என்று கட்சியை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. 2 கழித்து நீங்கள் (ஈபிஎஸ்) எங்கு இருக்கிறீர்கள் என்று பார்ப்போம். நிரந்தர பொது செயலாளர் என்ற பதவியை ரத்து செய்துவிட்டு அவர் அம்மாவுக்கு துரோகம் செய்துள்ளார் என்று கூறினார்.

Most Popular